ஆக்கி போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆக்கி போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  இந்தியா வெற்றி
Published on

பெர்த்,

இந்திய மகளிர் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 3-வது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. சோனம் (36-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (49-வது நிமிடம்) கோலடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com