

ஆம்ஸ்டெல்வின்,
16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து அமர்க்களப் படுத்தியது. அதாவது கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 5-வது, 21-வது நிமிடங்களிலும், முன்கள வீரர் அபிஷேக் 11-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.
இதைத்தொடர்ந்து பதிலடி கொடுக்க தீவிரம் காட்டிய பாகிஸ்தான் 2 கோல் திருப்பி நெருக் கடி அளித்தது. அந்த அணி வீரர்கள் ஹனான் ஷகித் 22-வது நிமிடத்திலும், சுப்யான் கான் 24-வது நிமிடத்தில் கோல் போட்டனர். இதற்கிடையே இந்திய வீரர் அபிஷேக் (24-வது நிமி டம்) மீண்டும் கோலடித்தார். முதல் பாதியில் இந்தியா 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதே முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.
பிற்பாதியில் இந்திய வீரர் ஹர்திக் சிங்கும் (35-வது நிமிடம்) பாகிஸ்தான் வீரர் ஹனான் ஷகித் தும்(46-வது நிமிடம்) கோலடித்தனர். முடிவில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இந்தியா 2வது சுற்றுக்கு முன்னேறியது.