ஹாக்கி உலகக்கோப்பை: சிலி அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - சிலி அணிகள் மோதின
Image Courtesy : Hockey India Twitter 
Image Courtesy : Hockey India Twitter 
Published on

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நேற்று முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - சிலி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.

இதனால் ஆட்ட நேர முடிவில் 3 - 0 என சிலி அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com