சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை: தென் ஆப்பிரிக்கா அணியிடம் வீழ்ந்தது இந்திய அணி

இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடியது.
Image Courtesy: Hockey India 
Image Courtesy: Hockey India 
Published on

ஜோகூர்,

21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10-வது சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை தொடர் தற்போது மலேசியாவின் ஜோகூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷர்தா நந்த் திவாரி (9 மற்றும் 10-வது நிமிடம்), கேப்டன் உத்தம் சிங் (17-வது நிமிடம்), சுதீப் சிர்மகோ (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் மார்வின் சைமன்ஸ் (7-வது நிமிடம்), ஃபவாஸ் கஹ்டர் (34-வது நிமிடம்), சென்ஸ்வெசிஹ்லே நுபேன் (35-வது நிமிடம்), கேமரூன் லு ஃபாரெஸ்டியர் (49 மற்றும் 57-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com