

ஆக்லாந்து,
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட நூற்றாண்டு ஆக்கி தொடரின் கடைசி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஆக்லாந்தில் உள்ள லாயிட் எல்ஸ்மோர் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியின் டைலன் தாமஸ் 9-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
இந்திய அணியின் சஞ்சய் ராணா 16-வது நிமிடத்திலும், செல்வம் கார்த்தி 18-வது நிமிடத்திலும் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்று தந்தனர்.
ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பென்ஜி கல்ஹேன் கோல் அடித்து நியூசிலாந்து அணிக்கு சமநிலையை ஏற்படுத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
முதல் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி போட்டியும் டிராவில் முடிந்ததால், 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தியா – நியூசிலாந்து இடையேயான 100 ஆண்டுகால விளையாட்டு உறவைக் கொண்டாடும் வகையில் இந்த தொடர் நடத்தப்பட்டது.