ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி

ஜூனியர் ஆக்கி போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி
Published on

ஜோஹர் பாரு,

6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக 4 வெற்றிக்கு பிறகு இந்தியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (12 புள்ளி), இங்கிலாந்து (10 புள்ளி) அணிகள் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இன்று மீண்டும் சந்திக்கின்றன.


Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com