ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி..!

இதில் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
image courtesy; twitter/ @TheHockeyIndia
image courtesy; twitter/ @TheHockeyIndia
Published on

கோலாலம்பூர்,

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

இதில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதியில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. ஜெர்மனி அணி தரப்பில் பென் ஹாஸ்பாக் 2 கோல்களும், பால் கிளண்டர் மற்றும் ப்ளோரியன் ஸ்பெர்லிங் ஆகியோர் தலா 1 கோலும் அடித்து அணி வெற்றி பெற உதவினர். இந்திய அணி தரப்பில் சுதீப் மட்டுமே 1 கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதில் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜெர்மனி-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com