இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்

இது தமிழக ஆக்கி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்
Published on
Updated on

பெல்ஜியம்,

பெல்ஜியத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஜூனியர் ஆக்கி அணிக்கு தமிழக வீரர் மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி வீரர்

பெல்ஜியத்தில் ஜூலை 5 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச பயிற்சி (Exposure Tour) போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த வீரர் மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஜூனியர் அணிக்கான 22 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை ஆக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வி. மணிமாறன் இடம்பெற்றுள்ளார். இது தமிழக ஆக்கி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் போட்டி

இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக ஆறு போட்டிகளில் விளையாட உள்ளது. ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆஸ்திரியா அணிக்கு எதிரான போட்டிகளுடன் சுற்றுப்பயணத்தை தொடங்கும் இந்தியா, அதனைத் தொடர்ந்து,

ஜூலை 10 - பெல்ஜியம்

ஜூலை 13 – ஜெர்மனி

ஜூலை 14 - பெல்ஜியம் (2-வது போட்டி)

ஜூலை 17 -நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com