

ரோட்டர்டாம்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா ,நெதர்லாந்து அணிகள் மோதின .
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் தலா 2-2 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன. இதனால் வெற்றியை முடிவு செய்யும் ஷூட் அவுட் முறைக்கு போட்டி சென்றது.இதில்,1-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது .