புரோ ஆக்கி லீக்: ஸ்பெயின் அணியை சந்திக்கும் இந்தியா

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்த தொடரில் இருந்து விலகி விட்டதால் ஹர்திக் சிங் தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது.
புரோ ஆக்கி லீக்:  ஸ்பெயின் அணியை சந்திக்கும்  இந்தியா
Published on

ஹோபர்ட்,

9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு நாடுகளில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை சந்திக்கிறது. வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்த தொடரில் இருந்து விலகி விட்டதால் ஹர்திக் சிங் தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது.

ரூர்கேலாவில் சமீபத்தில் நடந்த இந்திய சுற்றில் பெல்ஜியம், அர் ஜென்டினா அணிகளிடம் தலா 2 முறை தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிர முனைப்புடன் தயாராகி இருக்கிறது.

இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com