புரோ ஆக்கி லீக்: தோல்விகளால் துவளும் இந்திய அணி

இந்திய அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
image courtesy:twitter/@TheHockeyIndia
image courtesy:twitter/@TheHockeyIndia
Published on

ஆன்ட்வெர்ப்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்று பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இந்திய அணியில் சஞ்சய் மற்றும் தில்பிரீத்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் டிம் பிராண்ட், பிளேக் கவர்ஸ் மற்றும் கூப்பர் பர்ன்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த சுற்றில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். இப்படி தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள இந்திய அணி தனது அடுத்த லீக்கில் இதே இடத்தில் வருகிற 21-ந்தேதி பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com