புரோ ஆக்கி லீக்: ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

புரோ ஆக்கி லீக்கில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது.
புரோ ஆக்கி லீக்: ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
Published on

புவனேஸ்வர்,

9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

இரவில் நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மல்லுக்கட்டின. இதில் ஒரு கட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய இந்தியா அதன் பிறகு ஆக்ரோஷமாக விளையாடி எழுச்சி பெற்றது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் அடித்த கோல் மூலம் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. ஸ்பெயின் கேப்டன் மார்க் மிராலஸ் ஹாட்ரிக் கோல் அடித்தும் அந்த அணிக்கு பலன் இல்லை.

இந்த தொடரில் 5-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியாவுக்கு இது 4-வது வெற்றியாகும். இவ்விரு அணிகளும் இதே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மறுபடியும் சந்திக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com