புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி 2-வது தோல்வி

இந்திய அணி தரப்பில் வைஷ்னவி பால்கே மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
image courtesy:twitter/@TheHockeyIndia
image courtesy:twitter/@TheHockeyIndia
Published on

லண்டன்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஆக்கி லீக் தொடரில் லண்டனில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டிருந்தது.

இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 கோல்கள் போட்டது. இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் தோல்வியை தழுவியது. இந்தியா தரப்பில் வைஷ்னவி பால்கே மட்டுமே ஒரு கோல் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் எமி லாட்டன் மற்றும் லெக்சி தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com