எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: சவிதா புனியா தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிப்பு

நேஷன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Tweeted By HockeyIndia
Image Tweeted By HockeyIndia
Published on

புதுடெல்லி,

மகளிர் எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் ஸ்பெயினில் உள்ள வலென்சியாவில் டிசம்பர் 11 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்திய அணி, சிலி, ஜப்பான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஏ பிரிவில் அயர்லாந்து, இத்தாலி, கொரியா மற்றும் ஸ்பெயின் அணிகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோல்கீப்பர் சவிதா புனியா இந்திய அணியை வழிநடத்துகிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காத இந்தியாவின் மிட்பீல்டர் நவ்ஜோத் கவுர் அணிக்கு திரும்பியுள்ளார்.

நேஷன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய வீராங்கனைகள் பெயர் பின்வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம்.

டிபெண்டர்கள்: கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி.

மிட்பீல்டர்கள்: நிஷா, சலிமா டெடே, சுஷிலா சானு, மோனிகா, நேஹா, சோனிகா, ஜோதி, நவ்ஜோத் கவுர்.

முன்கள வீரர்கள்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், சங்கீதா குமாரி, பியூட்டி டங்டங்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com