சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஜி.எஸ்.டி. அணி வெற்றி

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி, ஸ்டேட் வங்கியை எதிர்கொண்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி, ஸ்டேட் வங்கியை எதிர்கொண்டது. ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்த ஜி.எஸ்.டி. அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை எளிதில் தோற்கடித்தது. ஜி.எஸ்.டி. அணியில் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி 3 கோலும், மணிகண்டன் 2 கோலும், முகமது யாசின், ஹசன் பாஷா தலா ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - இந்தியன் வங்கி அணிகள் மோதின. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியன் ஓவர்சீஸ் அணியில் கார்த்திக்கும், இந்தியன் வங்கி அணியில் சரவணகுமாரும் தலா ஒரு கோல் போட்டனர்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஏ.ஜி.அலுவலகம் - வருமான வரி (பிற்பகல் 2 மணி), ஐ.சி.எப். - இந்திய உணவு கழகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com