சூப்பர் டிவிசன் ஆக்கி: வருமானவரி, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி..!

சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.
சூப்பர் டிவிசன் ஆக்கி: வருமானவரி, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி..!
Published on

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் வருமானவரி அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய உணவு கழகத்தை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 6-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி நினைவு கிளப்பை பந்தாடியது.

இன்றைய ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்- சென்னை துறைமுகம் (பிற்பகல் 2 மணி), ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால்வரி -ஸ்டேட் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com