ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி இன்று தொடக்கம்

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி இன்று தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டாங்கே,

6-வது சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் உள்ள டாங்கே நகரில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா, மலேசியா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

சவிதா தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெறும் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்துடன் மோதுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடம் பிடித்த இந்திய அணி அதன் பிறகு பங்கேற்கும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com