பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரைஇறுதியில் இந்தியா-மலேசியா மோதல்

இந்திய அணியில் தீபிகா, லால்ரெம்சியாமி , நேஹா கோலடித்தனர்.
பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி:  அரைஇறுதியில் இந்தியா-மலேசியா மோதல்
Published on: 

போபால்,

9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிர தேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. நேற்று கடைசி சுற்று லீக் ஆட் டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்றது. இந்திய அணியில் தீபிகா (16-வது, 48-வது நிமி டம்), லால்ரெம்சியாமி (12-வது நிமிடம்), நேஹா (28-வது நிமிடம்) கோலடித்தனர். மற்ற ஆட்டங்களில் மலேசியா 4-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தையும், சீனா 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தின.

இந்தியா

லீக் சுற்று முடிவில் இந்தியா முதலிடமும் (5 ஆட்டங்களிலும் வெற்றி), ஜப் பான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், சீனா (2 வெற்றி. ஒரு டிரா, 2 தோல்வி) 3-வது இடமும், மலேசியா (2 வெற்றி, ஒரு டிரா. 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியா (ஒரு வெற்றி, 4 தோல்வி) 5-வது இடமும். தாய்லாந்து (5 ஆட்டங்களிலும் தோல்வி கடைசி இடமும் பெற்று வெளியேறின.

போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஜப்பான்- சீனா (மாலை 4.30 மணி) இந்தியா-மலேசியா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகி விருதை பெற்ற இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர்.

இதற்கிடையே, இந்திய பெண்கள் அணி, உலக தரவரிசையில் மேலும் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள் ளது. இது இந்திய அணியின் மிகச்சிறந்த தரநிலையாகும். தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இந்த ஏற்றத்தை கண்டுள்ளது.

X