பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்: இந்தியா-மலேசியா மோதல்

3 முறை சாம்பியனான இந்திய அணி, மலேசியாவுடன் மோதுகிறது.
பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்: 
இந்தியா-மலேசியா மோதல்
Published on: 

போபால்,

9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள சர்வதேச விளையாட்டு வளாகத்தில் இன்று முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணி கள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளான இன்று மாலை 4.35 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்திய அணி, மலேசியாவுடன் மோதுகிறது.

ஆக்கி

சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 44 ஆண்டுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்று அசத்திய இந்திய அணி அதன் பிறகு களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 2016, 2023, 2024-ம் ஆண்டுகளில் ஆசிய சாம் பியன்ஸ் கோப்பையை வென்று இருக்கும் இந்திய அணி தங்களது உத்வேகத்தை தொடர்ந்து சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 3-வது முறையாகவும், ஒட்டுமொத்தத்தில் 4-வது தடவையாகவும் கோப்பையை கையில் ஏந்தும் ஆர்வத் துடன் இருக்கிறது. வலுவான இந்திய அணி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் மலேசியாவை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சலிமா டெடி கூறுகையில், 'எங்களது எதிரணி என்ன செய்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. எங்கள் மீதும், எங்களுடைய ஆட்ட கட்டமைப்பு மீதும், பயிற்சியாளரின் அறிவுறுத்தலை பின்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். சுருக்கமாக சொல்லப்போனால் நாங்கள் எங்களுடைய ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம்' என்றார். முன்னதாக நடபெறும் மற்ற ஆட்டங்களில் சீனா-தாய்லாந்து (பகல் 12.05 மணி). ஜப்பான்- தென்கொரியா (பிற்பகல் 2.20மணி) அணிகள் சந்திக்கின்றன.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

X