பெண்கள் உலக கோப்பை ஆக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்த உலகக்கோப்பை தொடரை இந்திய அணி 9-வது இடத்தில் நிறைவு செய்துள்ளது.
Image Tweeted By @TheHockeyIndia
Image Tweeted By @TheHockeyIndia
Published on

ஆம்ஸ்டெல்வீன்,

15-வது பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, மூன்று லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வி, 2 டிரா பெற்றது. இதனால் இரண்டு புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது. பின்னர் காலிறுதிக்கான தகுதி சுற்றில் ஸ்பெயின் அணியிடம் இந்தியா வீழ்ந்தது.

9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதை தொடர்ந்து அடுத்து 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானை நேற்று எதிர்கொண்டது இந்தியா.

இந்த போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. இந்தியாவுக்காக நவ்நீத் கவுர் சிறப்பாக விளையாடி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இந்தியாவின் தீப் கிரேஸ் எக்காவும் இந்தப் போட்டியில் முக்கியமான கோலை அடித்தார்.

ஜப்பான் அணியின் சார்பில் யூ அசாய் கோல் அடித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரை இந்திய அணி 9-வது இடத்தில் நிறைவு செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com