மகளிர் தேசிய கோப்பைக்கான ஆக்கி போட்டி; உருகுவேவை வீழ்த்திய இந்தியா

போட்டி முடிவில் 3-2 என்ற புள்ளி கணக்கில் உருகுவேவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று உள்ளது.
மகளிர் தேசிய கோப்பைக்கான ஆக்கி போட்டி; உருகுவேவை வீழ்த்திய இந்தியா
Published on

ஆக்லாந்து

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மகளிர் தேசிய கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடந்து வருகின்றன. இதில், ஏ பிரிவில் இந்தியா மற்றும் உருகுவே அணிகள் இன்று விளையாடின.

இதில் போட்டியின் 13-வது நிமிடத்தில் உருகுவேவின் சியாரா அப்பென்னினோ முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். ஆனால், இந்தியாவின் தீபிகா தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, போட்டியின் 24-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் போட்டி 1-1 என சமனானது.

தீபிகா அதிரடி

இதன்பின்னர் 43-வது நிமிடத்தில் இந்தியா மற்றொரு கோல் அடித்தது. சோரங் அடித்த அந்த கோலால் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது. எனினும், உருகுவே கேப்டன் மேனுவெலா விலார் 55-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்ததும் போட்டி மீண்டும் 2-2 என சமன் அடைந்தது.

ஆனால், அடுத்த நிமிடத்திலேயே தீபிகா மீண்டும் தன்னுடைய 2-வது கோலை அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார். போட்டி முடிவில் 3-2 என்ற புள்ளி கணக்கில் உருகுவேவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com