உலகக்கோப்பை ஆக்கி: ஸ்பெயின் அணியை வீழ்த்தி ஜெர்மனி மீண்டும் சாம்பியன்

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி, தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.
உலகக்கோப்பை ஆக்கி:  ஸ்பெயின் அணியை வீழ்த்தி ஜெர்மனி மீண்டும் சாம்பியன்
Published on

வாவ்ரே

உலகக்கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக்கோப்பை ஆக்கி

16-வது உலகக்கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) கடந்த 15-ந்தேதி தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒருசேர நடத்தப்பட்ட இந்த போட்டியில் இருபாலரிலும் தலா 16 அணிகள் பங்கேற்றன.

இதன் ஆண்கள் பிரிவில் வாவ்ரேவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி, தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.

ஜெர்மனி சாம்பியன்

தொடக்கம் முதலே விறுவிறுப்புடன் சென்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. ஜெர்மனி அணியில் மைக்கேல் ஸ்ட்ரூதாப் 44-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.

ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வெல்வது இது 4-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை உலகக்கோப்பையை வென்றிருந்த பாகிஸ்தான் அணியின் (4 தடவை) சாதனையை சமன் செய்தது. ஏற்கனவே ஜெர்மனி 2002, 2006, 2023-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com