

நகோயா,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-
தடகளம்: பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் தகுதி சுற்று, வித்யா ராம்ராஜ், காலை 9.05 மணி, அனு ராகவன், காலை 9.13 மணி, பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதி சுற்று, ஷைலி சிங், ஆன்சி சோஜன், மாலை 3.35 மணி, பெண்க ளுக்கான 200 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டி, ஹரிதா பாத்ரா, உன்னதி போலன்ட், மாலை 3.55 மணி, ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டி, அனிமேஷ் குஜூர், மாலை 4.05 மணி, ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி சுற்று, சர்வேஷ் குஷாரே, ஆதர்ஷ் ராம், மாலை 4.15 மணி, பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் இறுதி சுற்று. நந்தினி. மாலை 4.53 மணி.
குத்துச்சண்டை: ஆண்களுக்கான 80 கிலோ கால்இறுதியில் அங்குஷ் (இந்தியா)-நெக்ருஸ் சலிமோவ் (தஜிகிஸ்தான்), காலை 9.45 மணி, பெண்களுக்கான 65 கிலோ கால்இறுதியில் பர்வீன் (இந்தியா) -நவ்பகோர் (உஸ்பெகிஸ்தான்), பிற்ப கல் 2 மணி, ஆண்களுக்கான 60 கிலோ கால்இறுதியில் சச்சின் (இந்தியா)-ஷுன்சுகே கிடமோட்டோ (ஜப்பான்), பிற்ப கல் 2.45 மணி, ஆண்களுக்கான 90 கிலோவுக்கு மேலான கால்இறுதியில் நரேந்தர் (இந்தியா)-அதாபோங் (தாய் லாந்து), மாலை 3.45 மணி.
ஸ்குவாஷ்: ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி, அபய் சிங் (இந்தியா)-ஈன் யோ (மலேசியா). பகல் 12.30 மணி, பெண் கள் ஒற்றையர் இறுதிப்போட்டி, அனாஹத் சிங் (இந்தியா)- சிவசங்கரி (மலேசியா), பகல் 1.30 மணி.
கைப்பந்து: ஆண்கள் லீக் சுற்றில் இந்தியா-வியட்நாம், பகல் 12.30 மணி.
ஆக்கி: பெண்கள் லீக் சுற்றில் இந்தியா-சிங்கப்பூர். மாலை 3.30 மணி.
பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் திரிஷா ஜாலி-காயத்ரி (இந்தியா)-பேர்லி டான்-தினா முரளிதரன் (மலேசியா), காலை 6 மணி, பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் பி.வி.சிந்து, காலை 9.30 மணி, உன்னதி ஹூடா, காலை 9.30 மணி.