

யோசு,
கொரிய ஓபனில் பட்டம் வென்று ஆன் சே-யங் அசத்தியுள்ளார்.
தென்கொரியாவில் நடைபெற்ற கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், தென்கொரியாவின் ஆன் சே-யங், ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆன் சே-யங் 21-12 என எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அடுத்த செட்டில் சிறப்பாக விளையாடிய யமாகுச்சி 21-15 என வென்று பதிலடி கொடுத்தார்.
இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் தீவிரமாகப் போராடினர். இதில் ஆதிக்கம் செலுத்திய ஆன் சே-யங் 21-16 என அந்தச் செட்டைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் 21-12, 15-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஆன் சே-யங், கொரியா ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஆன் சே-யங் இந்த ஆண்டில் வென்ற சர்வதேச பட்டங்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் 11 சர்வதேச பட்டங்கள் வென்ற சாதனையை கடந்த ஆண்டும் அவர் படைத்திருந்தார். தற்போது தொடர்ந்து 2-வது ஆண்டாக அந்த சாதனையைச் சமன் செய்துள்ளார்.