செஸ் - மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உலகின் 7-ம் நிலை வீரரை வீழ்த்திய 8 வயது தமிழக சிறுவன்

மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செஸ் விளையாடினார்.
செஸ் - மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உலகின் 7-ம் நிலை வீரரை வீழ்த்திய 8 வயது தமிழக சிறுவன்
Published on

சிவகாசி ,

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தமிழமுதன். 9 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இவர், 2000+ எலோ (Elo) ரேட்டிங்கை எட்டிய மிக இளம் வயது வீரர் என்ற பெருமைக்குரியவர்.

கடந்த ஒரு ஆண்டாக சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் வசித்து வரும் தமிழமுதன் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 48 சதவிகிதம் பேட்டரி மட்டுமே இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் ஹாட்ஸ்பாட் உதவியுடன் 'ப்ரீஸ்டைல் ப்ரைடே' (Freestyle Friday) ஆன்லைன் போட்டியில் பங்கேற்றார்.

Also Read
பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் ஒருவர்: வினேஷ் போகத்
செஸ் - மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உலகின் 7-ம் நிலை வீரரை வீழ்த்திய 8 வயது தமிழக சிறுவன்

மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் விளையாடிய தமிழமுதன், உலகின் 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) முதல் சுற்றிலேயே வீழ்த்தி அதிரடி காட்டினார். லேப்டாப் பேட்டரி தீரும் வரை விளையாடிய அவர், 5 சுற்றுகளில் 3-ல் வெற்றி பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com