

நியூயார்க்,
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து தொடரான ’என்பிஏ’ சாம்பியன்ஷிப்பில், 53 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து நியூயார்க் நிக்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
’என்பிஏ’ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூயார்க் நிக்ஸ் மற்றும் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஜேலன் பிரன்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவரது அபார ஆட்டத்தால் நிக்ஸ் அணி 94-90 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பர்ஸ் அணியை வீழ்த்தியது.
1973-க்கு பிறகு முதல் முறையாக ’என்பிஏ’ கோப்பையை வென்றதால், நிக்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக சாம்பியன் பட்டத்துக்காக காத்திருந்த ரசிகர்களின் கனவை நனவாக்கியுள்ள நிக்ஸ் அணி, ’என்பிஏ’ வரலாற்றில் மறக்க முடியாத சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி நியூயார்க் நகரம் முழுவதும் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது.