ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: லக்சயா சென் வெற்றி

லக்சயா சென், ஷி யுகியை (சீனா) சந்தித்தார்.
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: லக்சயா சென் வெற்றி
Published on

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண் டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் லக்சயா சென், உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஷி யுகியை (சீனா) சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 23-21, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் ஷி யுகிக்கு அதிர்ச்சி அளித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com