ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: தென்கொரிய வீராங்கனை அன்சே யங் சாம்பியன்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் நட்சத்திரமும், ஒலிம்பிக் சாம்பியனுமான அன்சே யங் (தென் கொரியா), 2-ம் நிலை வீராங்கனை வாங் ஷி யியுடன் (சீனா) மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அன்சே யங் 13-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வாங்கை வீழ்த்தி 2-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.

ஆண்கள் ஒற்றையரில் சீன வீரர் ஷி யு கி 21-17, 21-19 என்ற நேர் செட்டில் லீ சியாவ் ஹாவை (சீன தைபே) தோற்கடித்து கோப்பையை வசப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com