ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: திரிஷா-காயத்ரி ஜோடி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பர்மிங்காம்,

ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-14, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் சீனாவின் லி வென்மெய்- லி ஸியான் இணையை 64 நிமிடங்களில் தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது.

களத்தில் நீடிக்கும் ஒரே இந்திய ஜோடி இவர்கள் தான். ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, லக்ஷயா சென், ஶ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் தோற்று வெளியேறி விட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com