ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி வெற்றி

தென்கொரியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.




 ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி வெற்றி
Published on

காகமிகஹரா,

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் உள்ள காகமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 9 அணிகளும், பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் முறையே இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

பெண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது. விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com