சென்னையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இன்று முடிவு அறிவிப்பு

தேவையான மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாகவும் அதில் கூறியிருக்கிறது.

சென்னையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இன்று முடிவு அறிவிப்பு
Published on: 

டோக்கியோ,

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 28-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை 2029-ம் ஆண்டில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த தமிழக அரசும், இந்திய தடகள சம்மேளனமும் விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கான உரிமம் கோரி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்த ஆசிய தடகள சங்கத்தின் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தடகள சம்மேளனம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. சர்வதேச தரத்திலான சென்னை நேரு ஸ்டேடியத்தில் போட்டிக்கு தேவையான மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாகவும் அதில் கூறியிருக்கிறது.

ஆசிய தடகள சங்கம்

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு தடகள சங்க நிர்வாகி சி.லதா கூறுகையில், 'நாங்கள் எங்கள் திட்டத்தை முன் வைத்துள்ளோம். மாநில அரசிடம் இருந்து நிதி மற்றும் பிற உத்தரவாதங்களை சமர்ப்பிக்குமாறு ஆசிய தடகள சங்கம் கேட்டுள்ளது. அந்த உத்தரவாதங்கள் கிடைத்தவுடன் 2029 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பை போட்டியை நடத் தும் உரிமையை சென்னைக்கு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை (இன்று) அந்த உத்தரவாதங் களை மாநில அரசிடம் இருந்து பெறுவோம் என்று நம்புகிறோம். எனவே இறுதி முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்' என்றார். மாநில அரசிடம் இருந்து உத்தரவாத கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் ஆசிய தடகள சாம் பியன்ஷிப் நடத்தும் வாய்ப்பு சென்னைக்கு வழங்கப்படும் என்பதை உலக தடகள அமைப்பின் துணைத் தலைவரும், இந்திய தடகள சம்மேளனத்தின் செய்தி தொடர்பாளருமான அடில் சுமரிவாலாவும் உறுதிப்படுத்தினார்.தடகளத்தில் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இதை இந்தியா ஏற்கனவே 3 முறை (1989, 2013 மற்றும் 2017-ம் ஆண்டு) நடத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது.

X