

நிங்போ,
43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஷீ யூகீ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சீன வீரர் 21-8, 21-10 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.