

உலான்பத்தார்,
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் பிலிப்பைன்சின் சியான் பாகுஹினை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல் 60 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிரியா 4-1 என்ற கணக்கில் சீனாவின் செங்யூ யாங்கையும், 54 கிலோ பிரிவில் இந்தி யாவின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் முங்குன் செட்செக்கையும் தோற்கடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.