ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறிய அங்குஷ் பங்கால்... இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறிய அங்குஷ் பங்கால்... இந்தியாவுக்கு பதக்கம் உறுதி
Published on: 

டோக்கியோ,

இந்திய குத்துச்சண்டை வீரர் அங்குஷ் பங்கால், ஆசிய விளையாட்டு 2026 ஆண்கள் 80 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் தஜிகிஸ்தானின் நெக்ரூஸ் சலிமோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதிச்சுற்றில் தஜிகிஸ்தானின் சலிமோவ் கடுமையாகப் போராடியபோதிலும், அங்குஷின் முன்னிலையை மாற்ற முடியவில்லை. அங்குஷ் பங்கால் 5–0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கான முதல் குத்துச்சண்டை பதக்கத்தை அங்குஷ் பங்கால் உறுதி செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com