

டோக்கியோ,
ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு திருவிழா இறுதிகட் டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் 4 தங்கப்பதக்கத்தை அள்ளிய இந்தியாவுக்கு போட்டியின் 13-வது நாளான நேற்று சற்று ஏமாற்றமாக அமைந்தது. வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் மட்டுமே நமக்கு சிக்கின.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று ஆடவர் அணி ரிகர்வ் வில்வித்தை பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தங்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது.பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 1–5 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது.