ஆசிய விளையாட்டு: 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்... வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தல்

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன.
 10 மீட்டர் ஏர் ரைபிள்
Published on

நகோயா,

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஹிமான்ஷு தில்லானுக்கு வெள்ளி

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹிமான்ஷு வெள்ளி, ருத்ராங்க்ஸ் வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.

தங்கப் பதக்கத்துக்கான இறுதிக்கட்ட போட்டியில் ஹிமான்ஷு தில்லான், சீனாவின் ஷெங் உடன் மோதினார். இதில் ஷெங் 233.0 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஹிமான்ஷு தில்லான் 231.0 புள்ளிகளுடன்வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ருத்ராங்க்ஸ் பாட்டீலுக்கு வெண்கலம்

இந்தியாவின் மற்றொரு வீரரான ருத்ராங்க்ஸ் பாட்டீல் இறுதிப்போட்டியில் 230.9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அணிகள் பிரிவிலும் வெள்ளி

முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவிலும் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது.

ருத்ராங்க்ஸ் பாட்டீல், பார்த்த் மானே, ஹிமான்ஷு தில்லான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1890.1 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

சீனா 1899.0 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், தென்கொரியா 1841.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com