ஆசிய விளையாட்டு: ஸ்கீட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு: ஸ்கீட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
Published on

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. கலப்பு ஸ்கீட் அணிகள் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய ஜோடி தகுதி பெற்றுள்ளது.

கலப்பு ஸ்கீட் போட்டியில் இந்தியா சார்பில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரினாஸ் தாலிவால் களம் இறங்கினர். தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது.

கலப்பு ஸ்கீட் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது. இதனால் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஸ்கீட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது கலப்பு அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com