ஆசிய விளையாட்டு: கபடியில் இந்தியா வெற்றிக்கொடி; மகளிர் அணிக்கு தங்கம்

முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா வெற்றியை உறுதி செய்தது.
ஆசிய விளையாட்டு: கபடியில் இந்தியா வெற்றிக்கொடி; மகளிர் அணிக்கு தங்கம்
Published on: 

டோக்கியோ,

ஆசிய விளையாட்டு போட்டியின் கபடி மகளிர் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஈரானுக்கு எதிராக இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பதிவு செய்தனர்.

தொடக்கம் முதலே தாக்குதல் மற்றும் தடுப்பு ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு 37-34 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் இந்திய மகளிர் கபடி அணி ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த வெற்றி இந்தியாவின் பதக்க எண்ணிக்கையில் மேலும் ஒரு தங்கத்தை சேர்த்துள்ளதுடன், இந்திய கபடி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com