

நகோயா,
20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் படகோட்டுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சத்னம் சிங் - சல்மான் கான் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் சத்னம் சிங் மற்றும் சல்மான் கான் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் 6 நிமிடங்கள் 13.25 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடத்தை பிடித்தனர்.
இதன்மூலம் இந்தியாவுக்கு படகோட்டுதல் பிரிவில் மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது.