

டோக்கியோ,
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா, ஒட்டுமொத்தமாக 46 பதக்கங்களுடன் 11-வது இடத்தில் உள்ளது.