ஆசிய விளையாட்டு: இந்திய வீரர் வீரர் சுமித் காயத்தால் விலகல்

நடுவர் போட்டியை நிறுத்தி அலி காசிம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

ஆசிய விளையாட்டு: இந்திய வீரர்  வீரர் சுமித் காயத்தால் விலகல்
Published on: 

நகோயா,

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக் கான 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித், ஈராக்கின் அல் சாரே அலி காசிமுடன் மோதினார். அரியானாவை சேர்ந்த 23 வயது சுமித் முதல் இரண்டு ரவுண்டுகளில் முன்னிலை வகித்தார். 3-வது ரவுண்டில் எதிராளி விட்ட குத்தை தடுத்த சுமித் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் முழங்காலில் காயம் அடைந்த அவரால் போட்டியை தொடர முடியவில்லை. இதையடுத்து நடுவர் போட்டியை நிறுத்தி அலி காசிம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com