ஆசிய விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
ஆசிய விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் முக்கிய போட்டிகள்
Published on: 

டோக்கியோ,

ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-

வில்வித்தை: காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் காலிறுதியில் சிகிதா தனிபார்த்தி (இந்தியா)-நூரிசா டியான் அஷ்ரிபா (இந்தோனேசியா), அதிகாலை 5.30 மணி, காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் காலிறுதியில் கணேஷ் மணிரத்னம் திருமுரு (இந்தியா)-சிலுன் சென் (சீன தைபே) காலை 9.47 மணி.

கிரிக்கெட்: ஆண்கள் அரையிறுதியில் இந்தியா-இலங்கை, காலை 10.30 மணி.

ஆக்கி: ஆண்கள் அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான், பகல் 1 மணி.

கைப்பந்து: ஆண்கள் காலிறுதியில் இந்தியா-பாகிஸ்தான், காலை 6.30 மணி.

ஜூடோ: பெண்கள் 57 கிலோ தொடக்க சுற்று, யாமினி மவுரியா, காலை 7.30 மணி, பெண்கள் 70 கிலோ தொடக்க சுற்று, இனுகன்பி தேகலம்பம், காலை 7.30 மணி.

துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தனிநபர் தகுதி சுற்று, அனிஷ் பன்வாலா, காலை 6.10 மணி.

ஸ்குவாஷ்: பெண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா- ஹாங்காங், காலை 7 மணி, ஆண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா-மலேசியா, பகல் 1 மணி.

டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் சுமித் நாகல் (இந்தியா)-வு யிபிங் (சீனா). காலை 8.30 மணி.

மல்யுத்தம்: ஆண்கள் 77 கிலோ தொடக்க சுற்று, அமன், காலை 7.22 மணி, பெண்கள் 62 கிலோவில் மான்சி, காலை 7.30 மணி, ஆண்கள் 60 கிலோவில் சுமித், காலை 7.55 மணி, ஆண்கள் 97 கிலோவில் நிதேஷ், காலை 8.19 மணி.

X

Daily Thanthi
www.dailythanthi.com