ஆசிய விளையாட்டு போட்டி : காலிறுதியுடன் முடிந்த பி.வி. சிந்துவின் பயணம்

டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனுமான சென் யூபெயிடம் தோல்வியடைந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி :  காலிறுதியுடன் முடிந்த பி.வி. சிந்துவின் பயணம்
Published on: 

டோக்கியோ,

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஆசிய விளையாட்டு 2026 மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சீனாவின் உலகின் 4-ம் நிலை வீராங்கனையும் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனுமான சென் யூஃபெயிடம் தோல்வியடைந்தார்.

பரபரப்பான போட்டியில் சிந்து முதல் செட்டை 21–11 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரண்டு செட்களில் சென் யூபெய் 21–18, 21–10 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் சிந்துவின் 2026 ஆசிய விளையாட்டு பதக்க கனவு காலிறுதியிலேயே முடிவுக்கு வந்தது. மேலும், தனிநபர் பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவுக்கு இந்த முறை எந்தப் பதக்கமும் கிடைக்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com