

டோக்கியோ,
45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 12-வது நாளான நேற்று இந்தியாவுக்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. வில்வித்தையில் 3, துப்பாக்கி சுடுதலில் 1 என ஒரே நாளில் இந்தியா 4 தங்கப்பதக்கத்தை வென்று பிரமிக்க வைத்தது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஸ்கிப் பிரிவு படகோட்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரின்ஸ் நோபல் மற்றும் மனு பிரான்சிஸ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகோட்டுதல் பிரிவில் இந்தியா தனது முதல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.