

டோக்கியோ,
ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு திருவிழா இறுதிகட் டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் 4 தங்கப்பதக்கத்தை அள்ளிய இந்தியாவுக்கு போட்டியின் 13-வது நாளான நேற்று சற்று ஏமாற்றமாக அமைந்தது. வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் மட்டுமே நமக்கு சிக்கின.
ஆசிய விளையாட்டில் இன்று பாய்மர படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.ஏற்கெனவே பாய்மர படகுப்பிரிவில் இந்தியா 2 பதக்கம் வென்ற நிலையில் தற்போது நேத்ரா குமணன் வெண்கலம் வென்றுள்ளார்.