ஆசிய விளையாட்டு: குண்டு எறிதலில் இந்திய வீரருக்கு வெள்ளிப் பதக்கம்

குண்டு எறிதலில் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு: குண்டு எறிதலில் இந்திய வீரருக்கு வெள்ளிப் பதக்கம்
Published on: 

டோக்கியோ,

இந்தியாவின் முன்னணி தடகள வீரர் தஜிந்தர்பால் சிங் டூர், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் தனது சிறந்த முயற்சியாக 20.64 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

டூர் 2018 ஜகார்த்தா மற்றும் 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்ததால், தொடர்ந்து மூன்றாவது ஆசிய விளையாட்டு தங்கத்தை வெல்லும் வாய்ப்புடன் களமிறங்கினார். ஆனால் ஈரானின் மொஹம்மத்ரெசா தயேபிசே 20.81 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கத்தையும் புதிய ஆசிய விளையாட்டு சாதனையையும் பதிவு செய்தார்.

இதன் மூலம் டூர் தனது மூன்றாவது தொடர்ச்சியான ஆசிய விளையாட்டு பதக்கத்தை பெற்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com