

ஐச்சி-நகோயா,
ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி தொடரில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெள்ளி வென்றுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கான 200 மீட்டர் டி35 ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீதி பால் 29.53 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சீன வீராங்கனை சோ சியா 28.03 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதே பிரிவில் பங்கேற்ற பிரீத்தி பால், 32.19 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்த முறை அதை விட 2.66 விநாடிகள் வேகமாக இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.