

ஐச்சி-நகோயா
இந்திய வீராங்கனை பவினா படேல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
2026-ம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் 4-5 பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா படேல், சீனாவின் ஜாங் பியானை எதிர்கொண்டார்.
இதில் 7-11, 5-11, 7-11 என்ற செட் கணக்கில் பவினா தோல்வியடைந்தார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த அவர், வெண்கலப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.
முந்தைய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலம் வென்ற பவினா படேல், தற்போது மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.