ஆசிய பாரா விளையாட்டு: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா

பெண்களுக்கான 100 மீட்டர் டி12 இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய பாரா விளையாட்டு
Published on: 

ஐச்சி-நகோயா,

ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கம், வெள்ளி வென்றுள்ளது.

100 மீட்டர்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தடகளப் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஆண்களுக்கான 100 மீட்டர் டி47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் மகாது காவித் தங்கப் பதக்கத்தையும், முகமது பாசில் மோர்சிங்கனகத் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

காமன்வெல்த்

முன்னதாக, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் இதே பிரிவில் இருவரும் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற சிம்ரன் சர்மா

பெண்களுக்கான 100 மீட்டர் டி12 இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா 12.02 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஏற்கெனவே இதே தொடரில் பெண்களுக்கான 200 மீட்டர் டி12 ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்றிருந்த சிம்ரன், தற்போது 100 மீட்டர் போட்டியிலும் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com