பாரா ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு வில்வித்தையில் தங்கம்

இந்தோனேசியாவை 151–148 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

பாரா ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு வில்வித்தையில் தங்கம்
Published on: 

டோக்கியோ,

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் ஷீத்தல் தேவி (Sheetal Devi) – டோமன் குமார் (Toman Kumar) ஜோடி காம்பவுண்ட் கலப்பு அணிப் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை 151–148 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு வில்வித்தையில் முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கைகளின்றிப் பிறந்த ஷீத்தல் தேவி, தனது கால்களின் உதவியுடன் வில்வித்தையில் சாதித்து உலகளவில் கவனம் பெற்றவர்.

டோமன் குமாரும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பாரா வில்வித்தை வீரர் ஆவார். தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய ஜோடி, இறுதிப்போட்டியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. மேலும், தகுதிச்சுற்றில் இருவரும் இணைந்து 1,402 புள்ளிகளைப் பெற்று உலகச் சாதனையையும் படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com